வாசகர் கேள்வி :
உங்கள் முகத்தில் தாடையின் கீழ்ப்பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அது கத்தியால் ஏற்பட்ட காயம் என்கிறேன் நான். என் நண்பன் சொல்கிறான், நீங்கள் பிறக்கும் போதே இருந்ததாக. எது உண்மை?
எம்.ஜி.ஆர் பதில் :
நண்பர் சொல்வது தான் உண்மை.
வாசகர் கேள்வி :
உங்களுக்கு இருப்பது போல் உடற்கட்டு எனக்கு வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும். கூறுங்கள்?
எம்.ஜி.ஆர் பதில் :
என்னை விட, நல்ல உடற்கட்டு உங்களுக்கு வர முடியும், விடாமல் தேகப் பயிற்சி செய்து, ஒழுக்கத்தோடு இருந்தால்.
- 1963 ஆப் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘நடிகன் குரல்’ பத்திரிகையில் வெளிவந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அளித்த பதில்களில் ஒரு பகுதி.