எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் பண்டிகை!

திருவோணத் திருவிழா கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் திருவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேரளப் பாரம்பரிய முறைப்படி – மோகினி ஆட்டம், கை குத்துக் களி, செண்டை மேளம், ஆடல் – பாடல் போன்றவற்றுடன், கேரள உணவுப் பொருட்கள் விற்பனை சந்தை மற்றும் படகு செட்டிங் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இதுகுறித்து பேசிய இக்கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், “எங்கள் கல்லூரியில் பல்வேறு மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் படித்து வருகின்றனர்.

எனவே மாணவிகளிடையே ஒற்றுமையை வலியுறுத்தி பிற இனத்தவரது பண்டிகைகளை அவர்களது கலாச்சார முறைப்படி நாங்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகை, ஆடிப்பெருக்கு, தமிழ் வருடப் பிறப்பு, மலையாள வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகளைத் தொடர்ந்து, தற்போது ஓணம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடி இருக்கிறோம்.

இளைய தலைமுறையினரும் பாரம்பரிய கலாச்சார முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதே பாணியில் இந்தக் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறோம்” என்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியில் பயிலும் 4200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். எம்.ஏ. நாட்டியா துறையும், தொழில் முனைவுப் பிரிவும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

You might also like