டெல்லி ‘ராஜபாதை’ இனி ‘கடமைப் பாதை’!

தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ராஜ்பாதை என்ற பெயரை கர்த்தவ்யா பாத் எனப்படும் கடமைப் பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ராஜபாதையை மேம்படுத்தி, அழகுபடுத்தும் அனைத்துப் பணிகளும் திட்டமிட்டப்படி வேகமாக நடந்து வருகின்றன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம், ஒன்றிய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளி்ட்டோருக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டம்.

டெல்லி ராஜபாதை முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதனை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்க உள்ளார்.

You might also like