விஷுவல் கம்யூனிகேஷன்!

– டாக்டர் எம். ஜி. ஆர். ஜானகி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்:

1996-ம் ஆண்டு டாக்டர்.லதா ராஜேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட டாக்டர்.எம். ஜி. ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி கடந்த  26 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு துறைகள் உள்ளது. (நாட்டியா பி.காம், பிபிஏ) விஷுவல் கம்யூனிகேஷன் துறை 2018 இல் நிறுவப்பட்டு நான்கு வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

விஷுவல் கம்யூனிகேஷன் என்பது ஒரு ஊடகம் சார்ந்த துறையாகும்.

இதன் பொருள் காட்சி வழி தகவல் தொடர்பு ஆகும். இதில் ஓவியம் வரைதல் கணினி வரைகலை, புகைப்படம் எடுத்தல் மற்றும் இறுதி ஆண்டில் குறும்படம் எடுத்தல் குறித்த பல செய்முறை பாடங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த பாடநெறி அவர்களின் குறிப்பிட்ட திறன்களையும் படைப்பாற்றலையும் விரிவுபடுத்தும், இதனால் தொழில்துறையின் தொடர்ந்து மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் படைக்கும் திறன் அதிகரிக்கும்.

ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் தாராளமாக இந்தத் துறையை தேர்வு செய்யலாம்.

தொழில் மற்றும் வேலைக்கான வாய்ப்புகள் :

பத்திரிகையாளர், புகைப்பட நிருபர், திரைபட இயக்குனர், தொலைக்காட்சி தொடர்பு இயக்குனர், டிசைன் டைரக்டர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், வீடியோ ஜாக்கி, ரோடியோ ஜாக்கி, ஆர்ட் டைரக்டர், கிராஃபிக் கலைஞர், டிஜிட்டல் போட்டோகிராபர், அனிமேட்டர், கார்ட்டூனிஸ்ட், விளம்பர புகைப்படக்காரர் மற்றும் பத்திரிகைதுறையில் விஷ்வல் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலகட்டத்தில் இந்த துறைக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

You might also like