விவாகரத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

– கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது விவாகரத்து கேட்டு இளைஞர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் கலாசாரம் திருமணங்களை பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவுமுறை அதிகரித்து வருவதாகவும், புதிய தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணத்தை தடையாக பார்க்கின்றனர் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரிப்பு சமூகத்தை பாதிக்கும் என்ற நீதிபதிகள், கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளா, ஒருகாலத்தில் வலுவான குடும்ப உறவுகளை கொண்டிருந்ததாகவும், பலவீனம் மற்றும் சுயநலம் போன்றவற்றால் திருமண உறவுகள் உடைவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

You might also like