தேசியக் கொடியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது வேதனை!

 – சபாநாயகர் அப்பாவு

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர்.

காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர்.

அந்த தேசியக் கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “சீனாவில் தயாரித்த தேசியக் கொடியை கையில் ஏந்தி சென்றது வேதனையானது.

தேசியக் கொடியை கூட சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வது வேதனைக்குரியது, சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது” என தெரிவித்தார். 

You might also like