தற்கொலைகளிலும் விபத்துகளிலும் தமிழ்நாடு 2-வது இடம்!

சில புள்ளிவிபரங்கள் பதற வைக்கும்படி இருக்கின்றன.

இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகள் மற்றும் விபத்துகளைப் பற்றிய புள்ளிவிபரங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

தேசியக் குற்ற ஆவணப் பிரிவு தந்திருக்கிற தகவல்கள் இவை.

இதில், தேசிய அளவில் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம். 18 ஆயிரத்து 925 தற்கொலைகள் தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்திருக்கின்றன.
இது சென்ற ஆண்டை விட, அதிகம் – அதாவது தற்போது 11.5 சதவிகிதம்.

விபத்துக்களிலும் இதே மாதிரி இரண்டாம் இடம்.

16 ஆயிரத்து 685 மரணங்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சென்ற ஆண்டில் மட்டும் 57 ஆயிரத்து 90 போக்குவரத்து விபத்துகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.

இதில், அதிக வேகத்தில் சென்று விபத்துக்களில் சிக்குகிறவர்களே அதிகம்.

பொதுவாக எந்த நேரத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன?
மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை தான் அதிக விபத்துகள் நடக்கின்றன என்கின்றன புள்ளிவிபரங்கள்.

வாகனம் ஓட்டுகிறவர்கள் கவனமாக இருங்கள்!

You might also like