செய்தி :
தமிழக அமைச்சரவையில் ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.
கோவிந்து கேள்வி :
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிச்ச அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு வெளியிடத் தாமதமானதால் ஒரு ஆங்கில இதழில் ‘லீக்’ ஆகி சர்ச்சை ஆச்சு.
இப்போ ஏற்கனவே தாமதமாகி விட்டு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை இப்போ தான் அரசிடம் கொடுத்திருக்காங்க.. இதையாவது தாமதம் காண்பிக்காம உடனே வெளியிட்டுடுங்க, இல்லைன்னா அதுவும் எந்த ஊடகத்திலேயாவது ‘லீக்’ ஆகி பரபரப்பைக் கிளப்பி விட்டுறக் கூடாதில்லையா?
*