புதுமையான படைப்பாக உருவாகியுள்ள ‘தசரா’!

வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.

நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி முதல் முறையாக ஒரு கிராமிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலங்கானா பேச்சு வழக்குமொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா கிளிம்ப்சுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

“தசரா” திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் போஸ்டரில் நாயகன் தூசி படிந்த கைலி சட்டையுடன் நானி அதிரடியான கிராமிய லுக்கில் அசத்துகிறார்.

ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டுத்தனத்தைக் கூட்டுகின்றன. பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் உருவப்படத்தையும் நாம் போஸ்டரில் காணலாம்.

நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில் நானி நடிக்கிறார்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

You might also like