எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!

– திரு.வி.க.வின் சிந்தனை வரிகள்

  • பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.
  • யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
  • வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர் போல துணைநிற்கிறது.
  • இயற்கையை ஒட்டி வாழும் வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் சக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் பொருளில்லை.
  • அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.
  • ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி பொருந்தியிருக்கும்.
  • நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.

  • எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.
  • மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.

  • தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும், நல்ல குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும்.
  • மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.
You might also like