பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டும் பாஜக!

– தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்கு பரிவு காட்டும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறையை இந்திய நீதித்துறை மிகக் கடுமையாக பார்க்க நேரிட்டது.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பா.ஜ.க. அரசு தண்டனை குறைப்பின் மூலம் விடுவித்தது பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான அநீதியாகும்.

விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் சிறைச் சாலைக்கு வெளியே பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மிகப் பெரிய வரவேற்பை செய்ததை விட கொடுமையான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண வழக்கில் பள்ளி தாளாளரை கைது செய்தது ஏன்?- ஐகோர்ட்டு கேள்வி அதேநேரத்தில், பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராடிய தீஸ்தா செதல் வாட், ஆர்.பி. ஸ்ரீகுமார், சஞ்ஜீவ்பட் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால், வன்கொடுமை குற்றத்திற்காக நீதிமன்றங்களாலேயே தண்டிக்கப்பட்டவர்களை குஜராத் பா.ஜ.க. அரசு விடுதலை செய்திருக்கிறது.

குஜராத் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது, முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகவும், மாநில அமைச்சராக இருந்த அமித்ஷா தற்போது உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்கள்.

அன்று நடைபெற்ற படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

ஆனால், பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து 14 பேரை படுகொலை செய்தவர்களை நீதிமன்றம் தண்டித்த பிறகும், கருணை காட்டி தண்டனை குறைப்பு செய்வதை விட ஜனநாயக சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்கு பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார். 

You might also like