இலவசம் பற்றி முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம்!

– தலைமை நீதிபதி யோசனை

தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாயா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, “அனைத்து அரசியல் கட்சிகளும் இலவசங்களுக்கு ஆதரவாக உள்ளன. அதனால் தான் இதில் தலையிடுகிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நடந்த இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கலாம்.

பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவு எட்டுவதற்கு முன் ஒரு ஆழமான விவாதம் தேவை. நாங்கள் குழு அமைப்பதற்கு ஏற்கனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனால் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கலாம்” இவ்வாறு தலைமை நீதிபதி தனது யோசனையை தெரிவித்துள்ளார். 

You might also like