ஆண்களுக்கான திருமண ஆடையை எப்படித் தேர்வு செய்வது!

‘ஸ்டைலு ஸ்டைலு தான். நீ சூப்பர் ஸ்டைலுதான்… உன் ஸ்டைலுக்கேற்ற மயிலு நானு தான்’ என்று மணமகள் பாடும் அளவிற்கு மணமகன்கள் ஸ்டைலான ஆடைகளையே திருமணத்திற்கு உடுத்த ஆசைப்படுவார்கள்.

மணமகனுக்கு ஏற்ற ஸ்டைலான ஆடைகள் உங்களுக்காக

பட்டு வேஷ்டி – சட்டை:

முகூர்த்தத்திற்கு உங்களுக்கு வேறு ஆப்சனே இல்லை. ஆனால் பட்டு வேஷ்டி சட்டையை விட உங்களுக்கு ஒரு பொருத்தமான, ஸ்டைலான ஆடை இருக்கவே முடியாது.

அணிந்ததும் மணமகனுக்கான மிடுக்கான தோற்றம் உடன் வந்து ஒட்டிக்கொள்ளும்., பட்டு வேஷ்டி ரூ400 முதல் ரூ. 4000 வரையிலும், பட்டு சட்டை மீட்டர் ரூ.400 முதல் ரூ1000 வரையிலும், பட்டு துண்டு ரூ400 முதல் ரூ1000 வரையிலும் தரத்திற்கு தகுந்தாற்போல் கிடைக்கிறது.

செர்வாணி:

கம்பீர ராஜ தோரணையுடன் ரிசப்ஷனில் நீங்கள் காட்சி அளிக்க விரும்பினால், நீங்கள் செர்வாணியை தேர்வு செய்யலாம்.

மணமகளின் ரிஷப்ஷன் ஆடையையும் மனதில் கொண்டு, உங்களுக்கு ஏற்ற செர்வாணியை தேர்வு செய்தால், ஜோடி பொருத்தம் சூப்பராய் இருக்கிறது என எல்லோரும் கண் வைக்க போவது உறுதி.

ரூ.8,000 முதல் ரூ.30,000 வரை மதிப்பிலான செர்வாணிகள் கிடைக்கின்றன.

கோட்-சூட்:

இளவரசர் தோரணை எல்லாம் வேண்டாம் பெர்பெக்டான, ஸ்டைலான டிரஸ்தான் என்னோட செலக்ஷன்னு நினைக்கிறவங்களுக்கு இருக்கவே இருக்கிறது கோட் சூட். பல்வேறு வகைகள் மற்றும் நிறங்களில் கிடைக்கின்றன.

மணமகளின் எந்த ஆடையோடும் உங்களின் கோட் சூட் பொருந்திவிடும என்பதால் நீங்கள் சற்றும் யோசிக்காமல் உங்களுக்கு பிடித்தமான ஏற்ற கோட் சூட்டை தேர்வு செய்து விடலாம்.

ரூபாய் 4,000 முதல் ரூபாய் 50,000 வரையிலான கோட் சூட்கள் கிடைக்கின்றன.

இண்டோ – வெஸ்டர்ன்:

இப்போதைய டிரண்ட் இண்டோ வெஸ்டர்ன் தான். அல்ட்ரா மாடனாக காட்சி அளிக்க விரும்புகிறவர்கள் இண்டோ வெஸ்டர்ன் ஆடைகளை தேர்வு செய்யலாம்.

சங்கித், ரிசப்சனுக்கு இண்டோ வெஸ்டான் சரியான தேர்வாக இருக்கும்.

இண்டோ வெஸ்டானில் பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. ரூ.9000 முதல் ரூ.26,000 வரை மதிப்பில் இண்டோ வெஸ்டர்ன் ஆடைகள் கிடைக்கின்றன.

நன்றி: குமுதம் ‘கல்யாணம்’ தொகுப்பு மார்ச் – 2016.

You might also like