– பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு என்ற ரீதியில் கடிதங்களை பெற்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “பள்ளி நேரத்தில், பள்ளி வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் விஷயத்தில் தனியார் பள்ளிகள் தவறாக நடந்து கொண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தயங்காமல் புகார் அளிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.