நெடுஞ்சாலைத்துறை பணிகளின் வேகம் குறைந்தது ஏன்?

நாட்டில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்துள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஒன்றிய அமைச்சரவையிடம் சமா்ப்பித்துள்ள ஜூலை மாதத்துக்கான மாதாந்திர அறிக்கையில் விரிவாகக் கூறியுள்ளது.

அதன்படி, “கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நாட்டில் ஒருநாளைக்கு 37 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன எனவும்,

2021-22-ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்து, ஒருநாளைக்கு 28.64 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.

இதற்கு, அந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலான பருவமழைப் பொழிவு ஆகியவை காரணமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ஒருநாளைக்கு 20.43 கி.மீ. தொலைவு வரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுன.

இதன் மூலம் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின் வேகம் மேலும் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் 12,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like