பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக அடையாள உண்ணாவிரதம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் பல்வேறு சனநாயக சக்திகளின் ஆதரவோடு பட்டியல், பழங்குடியின மக்களின் மயானம், மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கிச்சா வரவேற்புரை ஆற்றினார்.

மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தோழியர் கீதா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் அரங்க. குணசேகரன், மக்கள் தமிழகம் கட்சி நிலவழகன், தமிழ்ப் புலிகள் கட்சி முகிலன், ஆதித் தமிழர் கட்சி விடுதலை வீரன்,

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி குடந்தை அரசன், மக்கள் நீதிக் கட்சி, அம்பேத் வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் குளிர் பானம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து பேசினார்.

You might also like