இந்திய-திபெத் எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 37 போ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 39 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனா்.
பேருந்து, சந்தன்வாரி – பஹல்காம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 2 போ் அதே இடத்திலேயே உயிரிழந்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றவா்கள், அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி 5 போ் உயிரிழந்தனா். மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவா்கள் மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.
இந்த விபத்திற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, துணை குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனா்.