இந்தியாவில் முதலில் லாட்டரி சீட்டு விற்பனையைத் தொடங்கிய கேரளா!

ஒரு விதத்தில் இந்தியாவிற்கே லாட்டரி விசயத்தில் முன்னோடியாக இருந்திருக்கிறது கேரளா. 1967-லேயே லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துவிட்டது அப்போதைய கேரள அரசாங்கம்.

அப்போது கேரளா நிதியமைச்சராக இருந்த பி.கே.குஞ்சுப் சாகிப் லாட்டரிக்கு வித்திட்டார். அதன் முதன் பரிசுக் குலுக்கல் 1968 – ஜனவரி 26 அன்று நடந்தது. அப்போது முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. ரூபாய் 50,000 அதன் பிறகு தற்போது லாட்டரி பம்பர் பரிசு 12 கோடி அளவில் உயர்ந்துவிட்டது.

அதோடு தினமும் வெவ்வேறு லாட்டரி பரிசு குலுக்களில் அங்கு நடந்துகொண்டு இருக்கின்றன. லாட்டரிக்காக தனியாக அரசு துறையையே இருக்கிறது. அதில் 500 பேர் வரை நிரந்தர ஊழியர்களாக இருக்கின்றனர்.

அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லாட்டரி ஏஜெண்ட் மட்டும் 50,000 பேர். பதிவு செய்யாதவர்களையும் சேர்த்தால் லாட்டரி சீட்டு விற்பனையார்கள் சுமார் 2 லட்சம் பேர்.

தமிழ்நாட்டில் லாட்டரி மோகம் அதிகரித்து, பல குடும்பங்கள் சீர்குலைந்த நிலையில் அதிரடி முடிவை எடுத்து லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாட்டில் தடை செய்தார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.

ஆனால், கேரளாவில் அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறபோது, இப்போதும் ஜரூராக நடந்துகொண்டு இருக்கிறது லாட்டரிச் சீட்டு விற்பனை.

– நன்றி: தி வீக் இதழ்.

You might also like