முன்னுதாரணமா இருங்க முதல்வரே!

செய்தி :

கொரோனா பரவலைத் தடுக்க சுதந்திர தின விழாவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்!

– மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோவிந்து கேள்வி : 

டெல்லி மாதிரி பல பகுதிகளில் மறுபடியும் கொரோனா பரவுகிற வேகம் அதிகமா  இருக்குறதாச் செய்திகள் வந்துகிட்டே இருக்கு.. ஆனால் தமிழ்நாட்டில் இப்போ அரசு விழாக்களும், கட்சிக் கூட்டங்களும், கோவில் விழாக்களும் நடக்குது..

அதிலே கலந்துக்குறவங்க பலரும் முகக்கவசம் இல்லாமல் இருக்கிறதைத் தான் பார்க்க முடியுது.

அரசே முன்னின்று நடத்திய செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகிட்ட பிரதமரும், தமிழ்நாடு முதல்வரும், மற்ற அமைச்சர்களும் கூட முகக்கவசம் அணிஞ்ச மாதிரித் தெரியலை..

இதுக்கு முன்னாடி இயல்பா முகக்கவசம் அணிஞ்சிருந்த  மூத்த அரசு அதிகாரிகள் கூட இப்போ அதை விட்டுட்டாங்க.. மக்களைக் குற்றம் சாட்டுறதை விட்டுட்டு,  முதலில் பொறுப்பில் இருக்கிற நீங்கள்லே முகக் கவணம் மற்றும் பாதுகாப்பில் கவனமாகவும், முன்னுதாரணமாகவும் இருந்து காட்டணும்.

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?
*

You might also like