தமிழ் சினிமாவில் வீசும் அதிதி புயல்!

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் கொண்டாட்டமாக அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர்.

முத்தையா இயக்கத்தில் வெளியாகும் கார்த்தி நடித்த விருமன் படத்தில் மதுரைக்காரப் பெண்ணாக வருகிறார் அதிதி. இதுதான் அவருக்கு முதல் படம்.

ஆனால், அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு அவரது புகழ் உலகமெல்லாம் பரவிவிட்டது. ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறிவிட்டார்.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் சிம்புவுக்கு நாயகியாகவும் நடிக்கவுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் இப்போது அதிதி புயல் வீசுவதாகச் சொல்கிறார்கள். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி பக்கமும் எட்டிப் பார்க்கப் போகிறாராம். அவ்வளவுதான்.

இனிமேல் அவர் கொடிதான் பட்டொளி வீசிப் பறக்கப்போகிறது என்கிறார்கள் சினிமா ஜோதிடம் புரிந்தவர்கள். அவருக்கு தொடர்ந்து கிராமத்துப் படங்களில் நடிக்கவும் விருப்பம் இல்லையாம்.

தற்போது அவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியிருக்கிறார். விரைவில் அந்த அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றிவரப் போகின்றன.

நயன்தாராவின் முதலிடம்தான் அவர் விரும்பும் உயரமாக இருக்கிறது. அதற்கான அத்தனை தகுதிகளும் அதிதியிடம் இருக்கிறது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அதிதி பாட்டு, டான்ஸ், நடிப்பு என்று அனைத்தையும் கற்று தேர்ந்துள்ளார். முன்னணி நாயகர்கள் மற்றும் இயக்குநர்களின் பார்வையும் அதிதி பக்கம் திரும்பியிருப்பதே அதற்கு சாட்சி.

You might also like