இன்னொரு விழிப்பு…!

நிச்சயிக்கப்பட்ட மாதிரியே
அந்தக் கனமான இயந்திர நசுங்கலில்
அவர்கள் செத்துப் போனார்கள்.

அரையிருட்டில்
அவசரமாய் வந்து புதைத்தன
சில பதட்டங்கள்.

பதட்டங்களின் பாதை தேடி
பின் போனால்
புதைவிடத்திலிருந்து
ரத்தக் கவிச்சியோடு முளைத்து
தொற்றுகின்றன புதுப்புதுச் சிறகுகள்.

– மணா என்கிற எஸ்.டி.லக்‌ஷ்மணன், லக்ஷ்மா – எனும் பெயரில் எழுதிய ‘இன்னொரு விழிப்பு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (1987).

You might also like