செய்தி:
தமிழகத்தில் கோவில் ஒன்றில் புத்தர் சிலை இருந்ததை உறுதி செய்திருக்கிறது தொல்லியல் துறை. இதையடுத்து “நாடு முழுவதும் நேர்மையாக அகழாய்வு நடத்தினால் புத்தர் சிலைகள் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார் டெல்லி மாநில சமூகநலத்துறை அமைச்சரான ராஜேந்திர பால் கௌதம்.
கோவிந்து கேள்வி:
சரியாத் தான் சொல்லியிருக்கீங்க.. முக்கியமான சில கோவில்களின் உண்மையான சிலை மூலத்தைக் கண்டுபிடித்தால் நிறைய புத்தர் சிலைகளும், சமணர் சிலைகளும் கிடைக்கலாம். அதாவது நேர்மையாகத் தொல்லியல் ஆய்வு நடந்தால்ன்னு சரியாச் சொல்லியிருக்கீங்க.. அது சரி.. அப்படி நேர்மையான அகழாய்வை நடத்த விடுவார்களா?