காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநரான கண்ணனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெற்றதற்காக அவரது காலச்சுவடு குடும்பம் பாராட்டு விழா ஒன்றை எளிய முறையில் நடத்தியுள்ளது.
இதுபற்றி அவர்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
“கண்ணனின் அம்மா திருமதி கமலா ராமசாமி வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
ஆ.இரா. வேங்கடாசலபதி, தி.அ. ஸ்ரீனிவாசன், அ.கா. பெருமாள், நெய்தல் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
திருமதி மைதிலி கண்ணன் காலச்சுவடுடனான தன்னுடைய அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
காலச்சுவடு குடும்பத்தின் உறுப்பினர்கள் செவாலியே கண்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினோம்.
அ.கா. பெருமாள், பெர்னார்ட் சந்திரா ஆகியோர் தங்கள் அன்பின் அடையாளமாகப் பொன்னாடை போர்த்தினார்கள்.
நெய்தல் கிருஷ்ணன் நினைவுப் பரிசை வழங்கினார். கண்ணனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
– பா. மகிழ்மதி