சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் திறக்கப்படவுள்ளது.
புத்தக விற்பனை நிலையம், கூட்ட அரங்கம், கதை விவாத அறை, கலை அருங்காட்சியகம், பழச்சாறு நிலையம், தேநீர்க் கடை என ஒரு மால் போல தயாராகி வருகிறது.
இதுபற்றி பதிப்பாளர் வேடியப்பன், “டிஸ்கவரி புக் பேலஸ் புதிய இடமாற்ற வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாக திறப்பு விழா இருக்கும்படி திட்டமிடுகிறோம்.
வாசகர்களின் வருகையும், நண்பர்களின் ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்.
மரநிழல் படிந்த வளாகம், காற்றோட்டமான கூட்ட அரங்குகள், விசாலமான புத்தக விற்பனை நிலையம்,
ஜூஸ் சென்டர், தேநீர் விடுதி என சென்னையின் நவீன புத்தக அடையாளமாக உருவாகிவருகிறது டிஸ்கவரி புக் பேலஸ்.
இலக்கிய ஆர்வலர்களின் மனசுக்குப் பிடித்த இடமாக அது இருக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிய வளாகத்தைப் பார்வையிட வரும் எழுத்தாளர்கள், கலைஞர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு வாசகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார் வேடியப்பன்.
பா. மகிழ்மதி