இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டவை குறித்த விவாதத்தின்போது மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதிளித்துப் பேசினார்.

அப்போது, “இந்தியாவில் பணவீக்கம் 7 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா அலை, ஒமைக்ரான், உக்ரைன் போர் உள்ளிட்ட சூழல்களைத் தாண்டி பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

மிகப்பெரிய உற்பத்தி மையமான சீனா, கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. இந்தியாவுடன் மற்ற நாடுகளைப் பொருத்திப் பார்த்து இந்தியாவை அவமதிக்க வேண்டாம்” எனக் கூறினார்.

You might also like