2020 ம் ஆண்டு 1,70,000 போக்சோ வழக்குகள் பதிவு!

இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு போக்சோ வழக்குகள் பதிவாகின்றன என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி, தேசிய குற்றப் பதிவியல் ஆணையம் சேகரித்த தகவல்களை வெளியிட்டார்.

அதன்படி, “2020ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் 6,898 வழக்குகளுடன் முதல் இடத்திலும், 5,687 வழக்குகளுடன் மகாராஷ்டிரம் 2வது இடத்திலும் மத்தியப் பிரதேசம் 5,648 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருப்பது தெரியவந்தது.

அதேவேளையில், உத்தரப்பிரதேசத்தில் தண்டனை வழங்கப்பட்ட விகிதம் 71 சதவீதமாகவும் மகாராஷ்டிராவில் 31 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 37 சதவீதமாக இருப்பதும் அந்த புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே மணிப்பூர் மாநிலம்தான், கடந்த மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 2020ஆம் ஆண்டு பதிவான 1 லட்சத்து 70 ஆயிரம் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இது 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 57 சதவீதம் அதிகம்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like