சட்டத்தை அனைவரையும் அறியச் செய்வோம்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு

சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ஹிதாயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் 5-ஆவது நேற்று நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், நவீன சுதந்திர இந்தியாவின் எதிர்பார்ப்புகளை வரையறுக்கும் உயரிய ஆவணம் சட்டக் கல்லூரி மாணவா்கள் மற்றும் வழக்குரைஞா்களின் சிந்தனைக்கு உள்பட்டதாகவே இருக்கிறது என்றும்,

இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைவருக்குமானது எனவும், ஒவ்வொரு தனிநபரும் தங்கள் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வது அவசியம் எனவும் கூறிய அவர், இதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு எளிய வார்த்தைகளில் விவரிக்க வேண்டியது சட்டக் கல்லூரி மாணவா்களின் பொறுப்பு என்று பேசிய நீதிபதி என்.வி.ரமணா அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை பொதுமக்கள் அறிந்து கொண்டால் மட்டுமே நாடு செழிக்கும் என்றும் பேசினார்.

You might also like