அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் ஆறாவது நாளில், அலைக்கற்றை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் கோரியுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், ஆறாம் நாளான நேற்று நடைபெற்ற ஏலத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் அலைக்கற்றைகளை ஏலம் கோரியுள்ளன.
இதுவரை 37 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று 7-ஆவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,50 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ஆறாவது நாள் ஏலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்றும் ஏலம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.