குழந்தைகளைக் குறைவாகத் தாக்குகிறதா கொரோனா?

நாட்டில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும் 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்தும் மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.

அப்போது அவர், “குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக பெரியவர்களைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே சார்ஸ் கொரோனா தொற்றுகள் பொதுவாக பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.

12 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை எனக் கூறியுள்ள பிரவின் பவார், தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

You might also like