முகத்திற்கு மெருகூட்டும் சாக்லேட் ஃபேசியல்!

சாக்லேட் பெயரை கேட்டதும் அழும் குழந்தை கூட மகிழ்ச்சியில் துள்ளி குதித்து விடும். அந்த அளவிற்கு அதன் சுவையில் சொக்கி கிடக்கிறது நாவின் சுவை அரும்புகள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறோம் என்பதே உண்மை.
டார்க் சாக்லேட் இதயத்தை பாதுகாப்பதுடன் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.

சாப்பிட மட்டுதான் சாக்லேட் பயன்படுமா? சருமத்தின் அழகை பாதுகாத்து, இளமையுடனும் தோல் சுருக்கம் இல்லாமல் அழகை மெருகேற்றுகிறதாம் டார்க் சாக்லேட்.

சரும பாதுகாப்பில் சாக்லேட் பங்கு என்ன? எப்படி பயன்படுத்தலாம்?

சாக்லேட் பவுடர் கொண்டு பேசியல், ஃபேஸ் மாஸ்க் என்று சருமத்திற்கு பராமரிப்பு செய்து வந்தால் சரும நிறம் சீராகவும், அழகு அதிகரிக்கும்.

சாக்லேட் பேசியல் சருமத்தின் வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது.

முகத்தில் இருக்கும் அழுக்குகளை தங்க விடாமல் நீக்குகிறது. கரும்புள்ளி, பருக்கள், இறந்த செல்களை சுத்தப்படுத்தி சருமத்திற்கு மென்மையும், பொலிவையும் கொடுக்கிறது.

மேலும் முகத்தில் மாசுக்கள் தங்கவிடாமல் தடுப்பதால் முதுமையை தாமதப்படுத்தும் என்று அழகுக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சாக்லேட் பேசியல் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் மாற்றம் ஏற்படுவதுடன் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த சாக்லேட் பவுடர் ஃபேஷியல் சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்துவதோடு, முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.

அதோடு இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சாக்லேட் ஃபேஷியலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

1] சாக்லேட் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்:

கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

பால் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர் சர்க்கரை மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கெட்டியான பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு முகத்தை ஈரத்துணியால் துடைத்த பின் கலந்து வைத்துள்ள கொக்கோ கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையான மசாஜ் கொடுக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும்.

2.சாக்லேட் தயிர் பேக்

தேவையான பொருட்கள்

சாக்லேட் பவுடர் -1 டீஸ்பூன்

தயிர்- 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து ஃப்ரிட்ஜில் 20 வைத்து பின் முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும்.

பிறகு 15 நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளி அழுக்கு நீங்கி விடும்.

3.சாக்லேட் கடலைமாவு பேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

கொக்கோ பவுடர் – 1ஸ்பூன்

கடலை மாவு – 1 ஸ்பூன்

பால் – தே.அளவு

காபி பவுடர் – ½ ஸ்பூன்

செய்முறை:

முகத்தை தண்ணீர் கொண்டு நன்றாக துடைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கலந்த கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுத்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடவும். அதன் பிறகு தண்ணீர் கொண்டு துடைத்து எடுக்கவும்.

இந்த பேக் முகத்தில் சருமத்துளைகளை ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது. மேலும் முகத்திற்கு கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் முகம் பிரகாசமாக இருக்க உதவுகிறது. மாதம் மூன்று முறை பயன்படுத்தலாம்.

4.பாதாம் சாக்லேட் பேக்

தேவையான பொருட்கள்

கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

பாதம் விழுது – 1 ½ ஸ்பூன்

கொக்கோ பவுடர் மற்றும் பாதாம் விழுது இரண்டையும் கலந்து முகத்தை கழுவிய பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட் முகத்தில் எல்லா இடத்திலும் படும்படி தடவி கொள்ளவும். அப்படியே 20 நிமிடம் காய்ந்த பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும்.

இந்த பேக் வாரத்தில் ஒரு முறை போட்டு வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். முகத்தின் ஈரத் தன்மையை தக்கவைக்கும், மிருதுவாகவும், பொலிவுடன் இருக்கும்.

சாக்லேட் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகை மேம்படுத்த உதவுகிறது.

இயற்கையாக ஆரோக்கியமாக சருமத்தைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு ஸ்வீட்டான பேசியலாக இருக்கும்.

-யாழினி சோமு

You might also like