டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’!

முன்னணி நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ என்ற த்ரில்லர் திரைப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படுகிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கடாவர்’. நடிகை அமலாபால் கதாநாயகி.

ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், பசுபதி, நிழல்கள் ரவி, ஜெயராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதிய படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார்.

மர்மமான முறையில் தொடரும் கொலைகள் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.

கொலை வழக்கின் இறுதிக்கட்டத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் இருக்கின்றன.

உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.

You might also like