செய்தி :
தமிழகத்தின் நிலைமையைப் பார்த்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததைப் போல நடந்துவிடும் போலிருக்கிறதே! பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேச்சு.
கோவிந்து கேள்வி :
ஏற்கனவே அண்ணாமலை கிளறினாரு.. இப்போ ராஜா மேலும் சாம்பிராணி போட்டிருக்காரு.. இதே மாதிரியான புகார்கள் கலைஞர் ஆட்சியில் வந்தப்போ அவர் என்ன செஞ்சாருன்னு தெரியுமா?
89-91 ல் கலைஞர் முதல்வரா இருந்தப்போ தன்னோட உறவினர்கள் யாராவது சிபாரிசு செய்தால் அதை ஏற்க வேண்டாம்னு வெளிப்படையா அறிவிச்சாரு.
அதேபோல 1996-2001 ல் தி.மு.கவினர் யாரும் தன்னுடைய வீட்டுக்குக் கடிதங்களை எழுத வேண்டாம். அது சரியா என் கைக்கு வர்றதில்லை. அதனாலே கோட்டை முகவரிக்கு எழுதுங்கன்னு பகிரங்கமா தொண்டர்களுக்கு எழுதினாரு.
இப்போ அதே மாதிரி புகார்கள் வந்திருக்கு.. இப்போதைய முதல்வரும் அப்பா வழியைக் கையாளலாம் இல்லையா?