மேட்டூர் அணையிலிருந்து பாயும் 1,33,000 கன அடி நீர்!

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. ஆனாலும், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு ஒரு லட்சத்து 33 ஆயிரம் லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, ஆற்றில் குளிக்கவோ ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like