தீண்டாமை ஒழிய என்ன செய்ய வேண்டும்?

சாதித்  தீண்டாமையை ஒழிப்பது குறித்து பெரியார் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.

***

“தீண்டாமையைப் பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலைநிறுத்தத்தான் சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயொழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல.

இதனாலேதான் நாம் தீண்டாமை ஒழிவுக்கு சாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கிறோம். இம் மூன்றும் ஒழியாமல் தீண்டாமை ஒழியப்போவதில்லை.

தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை சாதி இருந்துதான் தீரும். சாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்.”

(குடி அரசு, 28.4.1936)

சாதி குறித்து இப்படிப் பேசிய பெரியாரின் பெயரில் அமைந்த பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் தேர்வில் தான் சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டு சர்ச்சையாகி இருக்கிறது.

துணை வேந்தர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். விசாரணை நடக்கிறது. அதெல்லாம் நடந்தாலும், தேர்வுக்கு வினாத் தாளைத் தயாரித்தவர்கள் எப்படி இப்படிப்பட்ட கேள்விகளைச் சேர்த்தார்கள்?

You might also like