செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரமோ வெளியீடு!

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ளநிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி, நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரமோ வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ரஹ்மான், அதிதி சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாமல்லபுரம் ஒளிரும் வகையில் புரமோ துவங்குகிறது. அதிதி சங்கர் தலைமையில் பெண்கள் நடனமாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.

“கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். டீஸரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like