கசிந்துருகும் மனம் படைத்த மக்கள் கலைஞர்!

‘ஹாய்’, என்று வார்த்தையை தமிழ் திரையுலகில் பிரபலப்படுத்தியவர்!

திரையுலகில் இவர் பற்றிய எதிர்மறையான செய்திகளை இது வரையில் கேள்விப்பட்டதேயில்லை.

தயாரிப்பாளர்களை பண நெருக்கடிக்கு ஆளாக்கியதே இல்லை!

சில தயாரிப்பாளர்கள் இவரிடம் கொடுத்த செக் பவுண்ட்ஸ் ஆகி திரும்பி வந்தது மட்டும் ஒரு சூட்கேஸ் நிறைய இருந்ததைப் பார்த்து நடிகர் சோ ஆச்சர்யப்பட்டியிருக்கிறார்.

அதற்காக ஜெய் சார் சொல்லும் பதில், “பணம் இல்லாததனாலதானே இப்படி பண்றாங்க. அவங்களைப் போய் நாம மறுபடியும் போய் தொந்தரவு பண்ணனுமா” என்று கேட்டிருக்கிறார்.

சில லட்சங்களுக்காக டப்பிங் பேசாமல் படத்தை முடக்கி விடும் நடிகர்களும் இப்போ இங்கே இருக்காங்க.

ஒரு நாள் தனது பிறந்த நாளுக்காக தனது சக நடிகர் ஒருவரை அனாதை இல்லம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அனாதை இல்லங்களில் அங்குள்ளவர்களுக்கு பரிசுகளை வழங்கி பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது வழக்கம்.

அன்றைய தினம் தான் அழைத்துச் சென்ற நடிகரின் கையாலயே பரிசுகளை வழங்கச் செய்திருக்கிறார்.

இதைப் பற்றி பின்னாளில் வேறு ஒரு நடிகர், ”ஏம்பா நீ செலவு பண்றே. உன் கையால கொடுக்காம, அந்த நடிகரின் கையால ஏன் கொடுக்க வச்சே”, என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்தான் வித்தியாசமான சிந்தனை.

“இந்த மாதிரியான விழாக்களுக்கு வந்து கொடுக்க பழகினார்னா, அவருக்கும் இங்கே வந்து பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஆசை வரும். இங்கேயிருக்கிற பிள்ளைகளுக்கும் பிரயோஜனமா இருக்கும்” என்றார்.

இங்கதான் மக்கள் கலைஞரா அவர் நம்மனதில் உயர்ந்து நிற்கிறார்.

ஆக்சன் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் தனது, ‘நூற்றுக்கு நூறு’, திரைப்படத்தில் நடிக்க வைத்து, அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

கே.பாலச்சந்தர் அவர்கள் ஸ்கிரீன் ஃபிளை என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் விளையாடியிருப்பார். தன்னால் நடிப்பிலும் முத்திரை பதிக்க முடியும் என்று சாதித்து காட்டினார் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like