பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பா.ஜனதாவுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நமது நாட்டில் பயங்கரவாதம் உருவாக காரணமாக இருந்ததே காங்கிரஸ் கட்சி தான் எனக் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கி இருந்தது என்றும், பயங்கரவாதிகள் நமது நாட்டில் காலூன்றுவதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளித்திருந்தது என்றும் கூறிய அவர்,
பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டினார். ஒன்றிய அமைச்சரின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.