அ.தி.மு.க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிராகச் செயல்படும் ஓ.பி.எஸ்.ஸூக்கு எதிராக கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும்,
கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியும், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை கழகப் பொறுப்புகளில் இருந்த நீக்கச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கழகத் தொண்டர்கள் யாரும் அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவிக்கம்மட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் கரவொலியுடன் நிறைவேறப்பட்டது.
பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் நீக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்,
“ஒன்றரை கோடித் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்தெடுக்கப்பட்ட என்னை, கழகத்திலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. சட்ட விதிகளுக்கு புறம்பாக நடந்த எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன். இனி சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு கழகத்தைக் காக்கும் பணிகளில் ஈடுபடுவோம்” என்று பேசியிருக்கிறார்.