இன்றளவும் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் படிக்கப்படும் வரலாற்றுப் புதினமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்துவருகிறகு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்.
சோழர்களின் வீரம் செறிந்த வரலாற்றைப் பேசும் கம்பீரமும் கவித்துவமும் கலந்த எழுத்து நடையில் விவரிக்கப்பட்ட பெருங்கதை.
சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் நடந்த கோலாகலமான விழாவில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார், டீசர் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
“பொன்னியின் செல்வன் திரைக்காவியம் வெற்றிகரமாக செப்டம்பர் 30 – இல் வெளியிடப்படுவதற்கு முன்னோட்டமாக இன்று டீஸர் வெளியிடப்பட்டதை ஆர்வமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் கண்டுவருகிறீர்கள்.
இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். காரணம் ஆங்கில திரைப்படங்கள் #Thor, #Marvelsக்கு இணையாக சோழ வம்சத்தாரின் திரைக்காவியம் வெளிவரவிருப்பது, உலகளவில் சோழ பரம்பரை, சோழர்களின் பராக்கிரமம், சோழ சாம்ராஜ்ஜியத்தின் புகழை நிலைநிறுத்தும்.
இத்திரைக்காவியத்தில் நானும் பங்கெடுத்து நடித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று உற்சாகம் பொங்க குறிப்பிட்டுள்ளார்.
பா. மகிழ்மதி