லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.

லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக மத்தியப் பிரதேச போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

லுக்அவுட் நோட்டீஸ் என்பது, போலீசாரால் அல்லது புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் நபரை நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது நாட்டிற்குள் நுழைவதையோ தடுப்பதற்காக வெளியிடப்படும் சுற்றறிக்கை ஆகும்.

இந்த சுற்றறிக்கை அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like