தமிழகத்துக்கு 9-வது இடம்
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது.
2022-ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வெளியிட்டார்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், ஒடிசா முதலிடம் பெறுகிறது. உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா 3-ம் இடத்திலும் உள்ளன.
இந்த தரவரிசை குறீயீட்டு பட்டியலில் தமிழகத்துக்கு 9-வது இடம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.