உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்த சமூக ஊடகங்கள்!

ஜூன் – 30 : சமூக ஊடகங்கள் தினம் இன்று!

ஒவ்வொருவர் கையிலும் உலகத் தகவல்களை அடைக்கி வைத்துள்ளது செல்போன்கள். நகரம் முதல் கிராமங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி அடிமைப்படுத்தி வருகிறது.

செல்போன்கள் மூலம் அதிக தகவல்கள் அதிகமாக மக்களிடத்தில் பரவத் தொடங்கியுள்ளது. சமூக வலைதளங்கள் நமக்கு நிறைய தகவல்களை வழங்கி வருகிறது.

ஜூன் 30, இன்று சமூக ஊடகங்களின் நாள் #SocialMediaday என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகிவருகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கைபேசி வழியே வரலாறு முதல் சினிமா, படிப்பு, சமையல், அண்மைச் செய்திகள், பட்டிதொட்டி, சர்வதேசச் செய்திகள் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் நாம் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் சமூக ஊடகங்களின் நாள் இன்று  கொண்டாடப்படுகிறது.

தனிமனிதன் தொடங்கி கூட்டு முயற்சியால் அவர்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் தளமாக இருந்து வருகிறது சமூக வலைதளங்களில்.

ஒவ்வொருவரின் தேடலிலும், கருத்து பரிமாற்றங்கள், மற்றும் மனித சிந்தனையை மூலதனமாக வைத்து பணம் ஈட்டுவது கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூ-டியூப், மெசஞ்சர் போன்ற அப்ளிகேஷன்கள் வேலையாக இருந்தாலும் சமூக ரீதியாகவும் தனி மனிதர்களிடையே நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நடக்கக்கூடிய ஒரு செய்தியை வாட்ஸ் அப் வாட்ஸ் மற்றும் சமூக ஊடகங்கள் நொடிப்பொழுதில் கடைக்கோடியில் இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

தற்கால சூழ்நிலையில் செய்தித்தாள், தொலைக்காட்சிகள் எல்லாம் தங்களுக்கு என்று சமூக வலைதளங்கள் உருவாக்கி அதன் வழியாகவும் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

மக்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்றவாறு செய்திகளை உடனுக்குடன் விரைந்து தருவதற்கு சமூக வலைதளங்களை நம்பி இருக்கின்றன.

யூடியூப் புள்ளி விவரங்களின்படி உலகில் இணையத்தைப் பயன்படுத்தும் 3.1 மில்லியன் மக்களை, நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் அலைபேசியுடன் சமூக வலைதளங்களில் அடிமைப்பட்டு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

அதிகப்படியான யூ-டியூப் சேனல்கள் அதிகம் முளைத்தது அந்த காலகட்டத்தில் தான். என்ன செய்வது என்று தெரியாமல் பொழுது போக்காக ஆரம்பித்த சேனல்கள் அதிகம்.

இதன் விளைவாக சாராசரியாக மக்கள் தூங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு இரவு பாதி கடந்த பின்னர் படுக்கைக்கு செல்வதாகவும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தனிமனித வாழ்க்கையை மாற்றிய சமூக ஊடகமான ஷேர் சாட், லிங்க்-இன், வைன், ஸ்நாப்-சாட் போன்ற சமூக ஊடகங்கள் தொழில் ரீதியாக பணம் சம்பாதிக்க இயங்குகின்றன.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற தளங்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் செய்தியை பகிர்ந்து கொள்ள இயங்கி வருகின்றன.

என்னதான் அறிவியல் மாற்றம் என்றாலும் இது வரமா? அல்லது சாபமா? எனே வினாவும் எழுகிறது.

செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ள பட்டு விட்டோம் என்பதே உண்மை.

அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது செல்போன் ஆதிக்கம். நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

வளரும் இளம் தளிர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாவது, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது, ஆன்லைன் விளையாட்டில் அடிமைபட்டு உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற சம்பவங்கள் மனதை கொஞ்சம் பாதிக்கத்தான் செய்கிறது.

உண்மையில் வரம் என்றாலும் இது போன்ற சம்பவங்கள் அறிவியல் வளர்ச்சியில் தீமைதான் என்று சொல்ல வேண்டும்.

இது உடல் ரீதியாகவும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக போகும் போது தீமையை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஆகவே சமூக ஊடக தினமான இன்று நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

தேவைக்காக கொண்டுவந்ததை தேவையில்லாமல் நேரத்தை செலவிட்டால் உங்கள் உடலும், மனதும் பாதிக்கப்பட்டு உங்களை பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் சமூக வலைதளங்களை.

– யாழினி சோமு

You might also like