கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!

ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னையில் இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு  சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா உலககளாவிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. 1991-லிருந்து இந்தியாவின் பொருளாதாரம் வளரத் தொடங்கியது.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற முடியும். அதிகாரம் பரவலாக வேண்டும்.

கல்விக் கடனுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 ரூபாய் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலை நீடித்தால் மாணவர்கள் கல்வி பெற முடியாது.

தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி அகற்றப்பட வேண்டும். ப.சிதம்பரம், அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே அளவீட்டில் குறைந்த தொகையில் ஜிஎஸ்டி வசூலிக்கும் முறையைத்தான் காங்கிரஸ் கொண்டுவர நினைத்தது” எனக் கூறினார்.

You might also like