மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்த ஒரு சிக்கலில் 40 எம்.எல்.ஏ.க்கள் வரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் லாட்டரி அடித்தது போன்று வெவ்வேறு புது அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.
அவர்களை முதலில் குஜராத்தில் உள்ள சூரத் நகருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
பிறகு குவஹாத்திக்கு தனி விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே ஸ்டார் அந்தஸ்து உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்படித் தங்க வைக்கப்பட்டிருக்கிற அவர்களுக்கு ஆகும் ஒரு நாள் செலவு மட்டும் 8 லட்சம் என்கிறார்கள்.
இந்தத் தகவல்கள் ஊடகத்தில் வெளிவந்திருக்கின்றன.
மகாராஷ்டிர அரசியலில் நாளைக்கு எப்பேர்பட்ட அரசியல் சூழ்நிலைகள் மாறும் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு மதிப்பை இந்த ஒரு சிக்கலான காலகட்டத்தில் உயர்த்தி விடுகிறார்கள்? எம்.எல்.ஏ.க்களுக்குத் தான் எவ்வளவு மதிப்பு!