நல்லதை நினைத்தே போராடு!

அண்மையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் நினைவூட்டப்பட்ட மக்கள் திலகத்தின் பாடல் – “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே”

நினைவில் நிற்கும் வரிகள்:

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறன் மயங்காதே

(என்னதான்)

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு

(என்னதான்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கழகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே மதிமயங்காதே

(என்னதான்)

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

(என்னதான்)

****

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963-ல் வெளிவந்த ‘பணத்தோட்டம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குரல்: டி.எம்.சௌந்திரராஜன்

இயக்கம்: கே.சங்கர்

You might also like