சென்னையில் ரூ.36 கோடியில் 366 பொதுக்கழிப்பிடங்கள்!

சென்னையில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 366 இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 943 இடங்களில் 7,590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன.

இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மேலும், முதல்வரின் ஆலோசனையின் பேரில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கையில், சென்னையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையிலும்,

சுகாதாரத்துடன் பராமரிக்கும் வகையிலும் பொதுக் கழிப்பிடங்கள் மறுசீரமைக்கப்படும் என அறிவித்தனடிப்படையில், சென்னையில் 366 இடங்களில் சிதிலமடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும்,

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்களை அமைக்கவும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 36 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டப் பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்தத் திட்டப்பணிகளுக்கான ஒப்பங்கள் கோரப்பட்டு 334 இடங்களில் பணிகளைத் தொடங்க ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

You might also like