உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிகப் பெரிய சொத்து. அதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உடலில் நோயில்லாமல் மனதில் கவலை இன்றி வாழ்வது என்பது மிகப்பெரிய வரம்.
இந்த இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது யோகக்கலை. நமது உடல் மனம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு, இளமையாக வாழ்வதற்கு யோகாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு கலையை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
நமது மனமும் உடலும் ஒருங்கிணைத்து ஒரு நிலையில் மனதை கொண்டுவந்து ஆழ்நிலையில் நம்மை கூட்டிச்செல்லும் ஒரு கலை யோகாசனம்.
மனப்பதற்றத்தை குறைத்து, நமது மூளையை சமநிலைப்படுத்துவது போன்ற மகத்தான பயன்களைத் தருகிறது இந்த யோகக்கலை.
இப்போது பரவலாக எல்லோர் மத்தியிலும் அறியப்பட்ட ஒரு கலையாகவும் பிரபலமாகி வருகிறது. மருத்துவர்களும் பல நோய்களுக்கு தீர்வாக யோகாசனத்தை பரிந்துரைக்கின்றனர்.
யோகா இப்போது வந்த கலை இல்லை நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற ஒரு அற்புதக் கலை. தற்போது தான் அதன் பலன்களை அறிந்து பிரபலமாகி வருகிறது மக்களிடம்.
இந்தியாவின் பாரம்பரியமான கலையாக விலங்கும் யோகாசனம், வெளிநாட்டவர்களையும் கவனிக்க வைத்துள்ளது. அவர்களும் முறையாக பயிற்சி பெற்று தங்கள் வாழ்வியலோடு இணைத்து வருகின்றனர்.
யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா சபையில் இதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடற்பயிற்சி என்பது கருவிகளை கொண்டு நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு உடலை வறுத்தி கொடுக்கும் பயிற்சியாகும்.
யோகா என்பது மனதை ஒருங்கிணைத்து எந்த ஒரு கருவியும் இன்றி உடலை வளைத்து நமது உடல் ரீதியான பிரச்சனைகளை தீர்த்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு கலையாகும்.
இந்த மாயக்கலையில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.
· பாதாங்குஸ்தாசனம்:
இந்த ஆசனம் செய்வதன் மூலம் வலுவிழந்த கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகள் பல படுத்த உதவுகிறது.
· சசாங்காசனம்:
நமது கைகள் மற்றும் தோள்களின் மேல் முதுகெலும்பை பாதுகாத்து பலத்தை அதிகரிப்பது முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
· சர்வங்காசனம்:
இது பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனையிலிருந்து பாதுகாத்து இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டால் இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
· வீரபத்ராசனம்:
நமது மூளைக்கு கொடுக்கும் ஒரு பயிற்சி என்று சொல்லலாம் கவனம், மனநிலை சமநிலையை ஏற்படுத்தி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் நமது உடலை உற்சாகமாக இயங்க வைக்கிறது.
· மகராசனா:
உடலில் தொல்லை கொடுக்கும் ஆஸ்துமா, முழங்கால் வலி மற்றும் நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சனையும் தீர்க்கும் ஒரு சிறந்த ஆசனமாகும்.
· உத்தனபாதாசனா:
இந்த ஆசனம் உடலில் செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை சீராக இயங்க வைக்கிறது. மேலும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துகொல்கிறது. சர்க்கரை நோயாளிகளின் கணையத்தைப் பாதுகாப்பதற்கு சிறந்த ஆசனமாக இருக்கும்
· தடாசனா:
உங்கள் தொடை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை உறுதிப்படுத்துகிறது. மேலும் இடுப்பு, கால், பாதங்கள் வலிமை அடைய உதவுகிறது.
· திரிகோனாசனா:
அஜீரணக் கோளாறை சரி செய்து இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
· பாலசனா:
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மன அழுத்தம் குறத்து உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
· பிராணாயாமம்:
சுவாசப் பாதையை சீராக்கி நச்சுத்தன்மையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதய குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மனதை ஒரு நிலைப்படுத்துகிறது.
ஆகவே யோகா என்பது உடலின் மொத்த இயக்கத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் முன்னோர்கள் நமக்கு வழங்கிய இந்த அற்புத கலையாகும்.
– யாழினி சோமு