யாருக்கு, எந்த மேக்கப் பொருத்தமாக இருக்கும்!

உருவத்திற்கும், நிறத்திற்கும் ஏற்றவாறு மேக்கப் போட்டால் தான் பொருத்தமாக இருக்கும். அப்படி, ஒவ்வொரு உருவத்திற்கும், நிறத்திற்கும் பொருத்தமான மேக்கப் வகைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

****

கைகளே படாமல் செய்யக்கூடிய ‘ஏர் பிரஷ் மேக்கப் தான் இப்போதைய டிரண்ட்.  இந்த மேக்கப் மூலம் கருவளையங்கள் இருந்தால் மறைத்துவிடலாம்.

மேக்கப் வழியாமலிருக்க, ‘வாட்டர் ப்ரூஃப் மேக்கப்’ தான் சரியான தேர்வு. ‘மேக்கப் போட்டதே தெரியக்கூடாது’ என நினைப்பவர்கள், அவர்களது சரும நிறத்தை விட, 1 டோன் குறைவாகவும், மேக்கப் பளிச்செனத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் அவர்களது சரும நிறத்தைவிட 2 டோன் அதிகமாகவும் ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கலாம்.

கண்களைப் பெரிதாகக் காட்டும் ‘ஐ மேக்கப்’பை தேர்வு செய்வது தான் இப்போதைய பேஷன். கடல் நீல நிறம், துருப்பிடித்த நிறம், மெட்டாலிக் ஷேடுகளில் ஐ ஷேடோவை உபயோகிக்கலாம்.

உதடுகளுக்கு லேசான பளபளப்புடன் கூடிய உதட்டு நிற ஷேடுகளை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

குட்டை முடி தான் பேஷன் என்று வைத்துக்கொண்டவர்கள் திருமணத்தன்று ஜடை போட முடியாதே என்று வருந்தவே வேண்டாம்.

ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படுகிற செயற்கை அட்டாச்மென்ட்டுகளை வைத்து எப்பேர்பட்ட ஹேர் ஸ்டைலையும் செய்துக்கொள்ளலாம்.

முகூர்த்தத்திற்கு பாரம்பரிய உடைக்கேற்ற ஜடை அலங்காரம் மற்றும் சிம்பிள் மேக்கப் கப் இவையே சிறப்பாக இருக்கும்.

மெஹந்தியில் சிம்பிள் டிசைன் விரும்புபவர்கள் அரபிக் மெஹந்தியையும், ஆடம்பரமாக வேண்டுவோர் ராஜஸ்தானி டிசைன்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

– தனலட்சுமி ராஜேந்திரன்

You might also like