பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு உணவு இட்லி, தோசை தான். ஆனால் இல்லத்தரசிகளின் பலரது பிரச்சனை சட்னி என்ன செய்வது என்ற குழப்பம். இதில் டிபனுக்கு ஏற்ற ஐந்து விதமான சட்னி வகைகளைப் பார்க்கலாம்.
1] முள்ளங்கி சட்னி
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – 2 கப்
சின்ன வெங்காயம் – 10
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
வரமிளகாய் – 4
பூண்டு – 2பல்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தே.அ
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடலை பருப்பு, வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு வெங்காயம் நறுக்கி வைத்த முள்ளங்கி உப்பு சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கி வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும். பிறகு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாளித்து சட்னியில் கொட்டுங்கள் சுவையான முள்ளங்கி சட்னி ரெடி.
2] காரச் சட்னி
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் –10
பூண்டு பல் – 20
புளி – சிறிய நெல்லி அளவு
சின்ன வெங்காயம் -4
எண்ணெய் –தே.அ
உப்பு தே.அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு கருகாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம், புளி போட்டு வதக்கி எடுக்கவும்.
ஆறியதும் உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
நல்லண்ணெய் சூடு செய்து இந்த சட்னி மேல் ஊற்றி பரிமாறவும்.
3] கத்திரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 2
வர மிளகாய் – 12
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 3
கடுகு – ½ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தே.அ
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு பொடியாக அரிந்து வைத்த வெங்காயம், கத்திரிக்காய் போட்டு வதக்கவும் பின் தக்காளி போட்டு வதங்கியதும் இறக்கிவிட வேண்டும்.
ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும் இப்போது சுவையான கத்திரிக்காய் சட்னி ரெடி.
4] பீர்க்கங்காய் சட்னி
தேவையானவை:
பீர்க்கங்காய் – 1
சின்ன வெங்காயம் – 10
புளி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 3
உப்பு – தே.அ
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – தே.அ
செய்முறை
எண்ணெய் ஊற்றி உளுந்து, மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும். பிறகு நருக்கிய பீர்க்கங்காய், புளி சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் அரைத்து தாளித்து பரிமாறவும்.
5] பிரண்டை சட்னி
தேவையான பொருட்கள்
பிரண்டை – 1 கப்
சி. வெங்காயம் – 10
வர மிளகாய் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
தனியா – ஸ்பூன்
தேங்காய் துருவல் – ¼ கப்
கறிவேப்பிலை – 2 கொத்து
புளி – சிறு உருண்டையளவு
உப்பு – தேவையானளவு
எண்ணெய் – தேவையானளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும் பின் மல்லி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு புளி, தேங்காய் துருவல் போட்டு இறக்கி விடவும். தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும்.
-யாழினி சோமு