கல்விக் கட்டணத்தில் தனியார் பள்ளிகள் கண்டிப்பு காட்டக் கூடாது!

– அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “மாணவர்களுக்கு  புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை 20 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். பள்ளிக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்கக்கூடாது  என்றும் அதையும் மீறி மாணவர்கள் மீது கடுமை காட்டும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

You might also like